சின்னத்திரையின் சம்பளத் திலகம் – மாதம் 60 கோடி வாங்கும் அதிசய நாயகன் யார் தெரியுமா?


சினிமாவில் முன்னணி நடிகர்கள் அதிகமான சம்பளம் பெறுவது பொதுவானதே. ஒரு காலத்தில் சின்னத்திரையில் பிரபலமடைந்தவர்கள் தான் பின்னர் சினிமா பக்கம் சென்றனர். ஆனால் இப்போது, சினிமாவில் புகழின் உச்சியில் இருப்பவர்கள் பலரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில்தான், சின்னத்திரையில் அதிக சம்பளம் பெறும் பிரபலம் யார் என்பதைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சல்மான் கான் தான் தற்போது சின்னத்திரையில் மாதத்திற்கு ரூ. 60 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.


அவர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சிக்காக, 15 வாரங்களுக்கு மொத்தமாக ரூ. 250 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கேற்ப, மாதத்திற்கு அவர் பெற்ற சம்பளம் ரூ. 60 கோடியை கடந்துவிடுகிறது.