சிறுவன் ஒருவரின் பிறப்புறுப்பை கடித்த நாய்; வீட்டினரிடம் மறைத்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்


காலி தேசிய வைத்தியசாலையில், பிறப்புறுப்பை கடித்த நாயால் பாதிக்கப்பட்ட ஏழு வயதுச் சிறுவன் நீர் வெறுப்பு நோயால் இன்று (27) உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், சிறுவனின் பிறப்புறுப்பு பகுதியை கடித்துள்ளதாகவும், இதை சிறுவன் வீட்டாரிடம் தெரிவிக்காமல், கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடல்நிலை மோசமடைந்த சிறுவன், கடந்த 24ஆம் திகதி சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்த சிகிச்சைகளும் பயனளிக்கவில்லை. இதனால் இன்று (27) அவர் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை முடிந்ததும், சிறுவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.