தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்: குறைவடைந்துள்ள தங்க விலை!


நாட்டில் கடந்த சில தினங்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலை, இன்றைய தினம் (ஏப்ரல் 7) சிறிதளவு குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் இன்றைய விலை ரூ.901,939 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 24 கரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.31,820 என பதிவாகியுள்ளதுடன், அதே தரத்தில் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.254,550 ஆகும்.

மேலும், 22 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.29,170 எனவும், ஒரு பவுணுக்கு ரூ.233,350 எனவும் பதிவாகியுள்ளது. இதனுடன் 21 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.27,850 ஆகவும், ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.222,750 ஆகவும் காணப்படுகிறது.

தங்க விலைகளில் ஏற்பட்ட இச்சிறிய மாற்றம், வர்த்தக சூழல் மற்றும் சர்வதேச சந்தை நிலவரத்தின் தாக்கமாக காணப்படுகின்றது.