பேருந்தில் பயணிக்கும் போது சாரியில் கால் பட்டதனால் மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியை..!
ஹட்டன் பொலிஸ் பிரிவில் ஒரு தனியார் பஸ்ஸில் நடந்த சம்பவம் குறித்து முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலையின் ஆசிரியை, திங்கட்கிழமை (07) மாலை டிக்கோயா பகுதியில் பஸ்ஸில் பயணிக்கும்போது ஒரு மாணவியின் கன்னத்தில் அடித்ததாக புகார் எழுந்துள்ளது.
குறித்த இந்த சம்பவமானது, பாடசாலை முடிந்த பிறகு ஹட்டனிலிருந்து போடைஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பயணித்தனர்.
அப்போது, மாணவியின் கால் ஆசிரியை ஒருவரின் சாரியில் மிதிபட்ட காரணத்தினால், ஆத்திரமடைந்த ஆசிரியை பஸ்ஸிலேயே மாணவியின் கன்னத்தில் பலமாக அடித்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் புகார்கள் வந்துள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்கப்பட்ட மாணவியை டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஹட்டன் பொலிஸார் இந்த வழக்கில் தொடர்புடைய ஆசிரியைக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி