அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு கணிசமாகக் குறைவு!


இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (09) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.  

நேற்றைய தினம் 293.44 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 295.86 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், நேற்று 302.14 ரூபாயாக இருந்த விற்பனைப் பெறுமதி இன்று 304.42 ரூபாயாக அதிகரித்துள்ளது.  

கனேடிய டொலரின் கொள்முதல் பெறுமதி 206.61 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 215.32 ரூபாயாகவும் உள்ளது. யூரோவின் கொள்முதல் பெறுமதி 324.36 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 337.34 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.  

ஸ்டர்லிங் பவுண்டின் கொள்முதல் பெறுமதி 377.94 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 392.15 ரூபாயாகவும் உள்ளது. அவுஸ்திரேலிய டொலரின் கொள்முதல் பெறுமதி 175.06 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 184.34 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.