இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் சிவப்பு நிறமாக மாற்றப்பட்ட அமெரிக்க தூதரக நீர்த்தடாகம்
இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் லண்டன் மாநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தடாகத்தை சிவப்பு நிறச் சாயத்தை கலந்து அதிலிருந்த நீரை சிவப்பு நிறமாக மாற்றி அமெரிக்காவுக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்த் தடாகத்தில் 300 லீட்டர் சிவப்பு சாயத்தை கொட்டிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘அமெரிக்க ஆயுதங்கள் கண்மூடித்தனமான போரை தூண்டிவிடுவதால் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்தோம். காசாவில் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன, முழு சுற்றுப்புறங்களும் இடிந்து விழுந்தன, பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன உயிர்கள் அழிக்கப்பட்டன.
‘இஸ்ரேலிய இராணுவத்திற்கு மிகப்பெரிய ஆயுத சப்ளையராக, காசாவில் வெளிப்படும் பயங்கரங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கொடூரமான இனப்படுகொலையைத் தடுக்க இஸ்ரேல் மீது முழுமையான ஆயுதத் தடையை அறிவிக்குமாறு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்களை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் போர்நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் படைகள் காசாவில் இராணுவ நடவடிக்கைகளை முடக்கிவிட்ட நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.