நாட்டு மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள அவசர அறிவிப்பு
மின்சார சபை சூரிய மின்படலங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் மின்கலங்களை குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே இன்றைய தினம் செயலிழக்க செய்யுமாறு இலங்கை மின்சார சபை, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் பட்சத்தில் வீட்டின் கூரைகளில் உள்ள சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு மின்சார சபை கோரியுள்ளது.
அவ்வாறு குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் தினமும் நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரையில் சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
21 ஆம் திகதி வரை குறுஞ்செய்தி அறிவிப்பு மூலம் மட்டும் சூரிய மின் மின்கலங்களை செயலிழக்க செய்தால் போதுமானது என மேலும் தெரிவித்துள்ளது.
