5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களுக்கான கட்டாயப் பிரேத பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம்!


நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களில் பிரேத பரிசோதனைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

25.04.2025 அன்று வெளியான சுற்றறிக்கையின் அடிப்படையில், 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணங்களும் கட்டாயமாக பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சிறுவர்கள் மரணத்திற்கு காரணமான விடயங்களை கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற மரணங்களைத் தடுப்பதே இதன் நோக்கமாக இருந்தது.

ஆய்வுப் பணிக்காக நிபுணத்துவ குழுவொன்றின் பரிந்துரை பெறப்படும் வரை, இந்த நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.