இம்முறையும் NPP க்கு வாக்களித்தால் தமக்குத் தாமே வைத்துக் கொள்ளும் கடைசி உலையாகத் தான் இருக்கும் - அர்ச்சுனா எம்பி
தேசிய மக்கள் சக்திக்கு (NPP) இம்முறையும் மக்கள் வாக்களிப்பார்களாயின், அது தாமே தமக்கு வைத்துக் கொள்ளும் கடைசி உலையாகத் தான் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்:
"நான் பாராளுமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு எனக்கு அனுபவம் குறைவாக இருந்தது. பாராளுமன்றத்தில் பணியாற்றிய பின்னரே தேசிய மக்கள் சக்தியின் (NPP) நிலைப்பாடு பற்றி முழுமையாக அறிந்தேன். இந்தத் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்களாயின், அது நாம் எங்களுக்கு வைக்கும் கடைசி உலையாகத் தான் இருக்கும்.
யாழ் மாகாண சபை வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவது பற்றி பிரச்சினையில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள எமது வாக்காளர்கள், கஜேந்திரன் பொன்னம்பலம் தலைமையிலான கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கஜேந்திரன் பொன்னம்பலம் அண்ணாவுடன் எந்தவொரு கோபமும் எனக்கு இல்லை. ஆனால், ஸ்ரீதரனுக்கோ சுமந்திரனுக்கோ எந்தவொரு வாக்கையும் வழங்கக்கூடாது என்பதே எனது தெளிவான வேண்டுகோள்." என்று குறிப்பிட்டுள்ளார்.