நாட்டில் திடீரென இலட்சக்கணக்கானோர் வேலையிழப்பு!
நாட்டில் நிலவும் தேங்காய் பற்றாக்குறை காரணமாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 450,000 பேர் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர். நாட்டின் தேங்காய் உற்பத்தியில் பெரும்பாலான பகுதி ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் கீழ் "தேங்காய் எண்ணெய்" என்ற பெயரில் இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த எண்ணெய்க்கு வரி விதிக்கப்படவில்லை. ஆனால், உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 15% வரி விதிக்கப்படுவது தொழில்துறையினரால் நியாயமற்றதாக கருதப்படுகிறது.
இதனால், உள்ளூர் கைத்தொழில்களையும், அதன்வழியாக பல தொழிற்சாலைகளையும் பாதித்து, அவை முடங்குவதற்கான காரணமாக அமைந்துள்ளது என பாரம்பரிய உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.