விஞ்ஞான வினாத்தாள் தொடர்பில் வெளியான விசேட செய்தி


விஞ்ஞானப் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் கூடுதலாக 8 புள்ளிகள் வழங்கப்படும் என கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் போலியானது என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான விஞ்ஞான வினாத்தாள் பாடத்திட்டத்திற்கேற்பவே தயாரிக்கப்பட்டுள்ளது. கேள்வி முறையில் மாற்றங்கள் உள்ளதாகும், அதனால் மாணவர்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும் என்பதிலும் எந்த உண்மையும் இல்லை.

மேலும், பெறுபேறுகளுக்கான மதிப்பீட்டு முறையில் 10 புள்ளிகள் குறைக்கப்பட்டதாகவும், 65 புள்ளிகளுக்கு மேல் பெறும் அனைவருக்கும் திறமைச் சித்தி வழங்கப்படும் என கூறப்படும் தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை.

எனவே, இத்தகைய தவறான தகவல்களை நம்பாமல், கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வியமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.