கலேவல பிரதேச சபை வேட்பாளராக களமிறங்கும் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்!
மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள கலேவல பிரதேச சபைக்கான உள்ளூராட்சித் தேர்தலில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சுயேச்சைக் குழுவின் சார்பாக வேட்பாளராகப் போட்டியிட தயாராக உள்ளார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தையும் அவர் செலுத்தியுள்ளார்.
இந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து சட்டரீதியான தகுதிகள் மற்றும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுடன் நடத்திய உரையாடலில், இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் உறுதியுடன், மக்களின் சேவைக்காகவே தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி