இன்றுடன் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் நிறைவு!


இன்று (20) எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், இன்று நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வேட்புமனுக்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்தவுடன் இன்று நண்பகல் 12.00 மணி முதல் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஒன்றரை மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி முதல் துவங்கப்பட்டது.

வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளும் பணிகள் நிறைவடைந்ததும் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்.

இதேவேளை, நேற்று உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான கட்டுப்பண நடவடிக்கைகளும் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.