காசா மக்களுக்காக ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள வேண்டுகோள்..!


கடந்த சில நாட்களாக பலஸ்தீனில் நடைபெற்றுவரும் தாக்குதல்கள் தொடர்பாக ஜம்இய்யத்துல் உலமா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில்;

காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். அல்லாஹ் தஆலா உயிரிழந்தவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸையும், காயமடைந்தவர்களுக்கு விரைவான சுகத்தையும் அளிப்பானாக.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில், அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் தொழுகை, நோன்பு, தர்மம், தௌபா, இஸ்திஃபார் மற்றும் துஆ போன்ற நற்செயல்கள் மூலம் அவனிடம் நெருங்க வேண்டும். 

எனவே, புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் நாம், இந்த மாதத்தில் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்குப் பின்னரும் பலஸ்தீன், காஸா மற்றும் உலகின் அனைத்து நாடுகளிலும் அமைதியும் சமாதானமும் நிலவவும், நீதி நிலைநாட்டப்படவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

குறிப்பாக, பஜ்ர் தொழுகையின் குனூத் மற்றும் வித்ர் தொழுகையின் குனூத்தில் மஃமூம்கள் தவறாமல் பிரார்த்தனை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை முஸ்லிம்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.