பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது!


பிரமிட் திட்டத்தை இயக்குதல், ஊக்குவித்தல் மற்றும் அந்த திட்டத்தை நிர்வகித்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் ஏழு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், 

ரத்மலானை, பன்னிப்பிட்டிய, கல்நெவ, ஹோகந்தர, பேராதனை மற்றும் கொழும்பு 04 பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.