இலங்கையர்களுக்கு TIN இலக்கம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!

8 பொருளாதார நடவடிக்கைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று (02) உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் பெரும் கூட்டம் அலைமோதியது.

இதுவரை TIN பெறாத பெருந்திரளான மக்கள் வருகை தந்ததால் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பலர் ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்றதால் இணையத்தளத்திலும் தடங்கல் ஏற்பட்டு, பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக முடக்கப்பட்டது.

வங்கி கணக்கு திறத்தல், வாகன பதிவு, வருமான உரிமம் புதுப்பித்தல், வணிக பதிவு உள்ளிட்ட 8 நடவடிக்கைகளுக்கு நவம்பர் 01 முதல் TIN கட்டாயம் என திணைக்களம் அறிவித்திருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் ஆணையாளர் நந்தன குமார, உடனடி தேவை உள்ளவர்கள் மட்டும் TIN பெற அலுவலகங்களுக்கு வருமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.