சனி வக்ர நிவர்த்தி: 138 நாள் கஷ்டம் முடிந்தது - 3 ராசிக்கு ஜாக்பாட்
ஜோதிடத்தில் நீதிமான் என அழைக்கப்படும் சனி பகவான், 138 நாட்கள் வக்ர நிலையில் இருந்து வருகிறார். டிசம்பர் 11 ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இருக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது.
மகரம்: மகர ராசியின் 3-வது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். டிசம்பர் முதல் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண பிரச்சனைகள் நீங்கி நிதி ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசியின் 11-வது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது மிகவும் மங்களகரமானது. எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உருவாகும். தேவையற்ற செலவுகள் கட்டுப்பட்டு சேமிப்பு அதிகரிக்கும்.
துலாம்: துலாம் ராசியின் 6-வது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பால் சமூகத்தில் உயர்வு கிடைக்கும்.
