அடுத்த சில மணிநேரங்களில் முரசு புயல் தீவிர புயலாக வலுப்பெறுகிறது - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள "முரசு" புயல் அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நேற்று (01) இரவு 11.30 மணியளவில் காங்கேசன்துறைக்கு வட-வடகிழக்கே 480 கி.மீ. தொலைவில் இந்த புயல் மையம் கொண்டிருந்தது.
இன்று (02) நள்ளிரவு முதல் நாளை (03) அதிகாலைக்குள் ஆந்திர கடலோரம் நெல்லூர் - நர்சாபூர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
10N-17N மற்றும் 80E-90E கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம். ஏற்கனவே கடலில் உள்ளவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1 மணிக்கு பிறகு பல மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை. கடலில் மணிக்கு 40-45 கி.மீ. வேகத்தில் காற்று, இடியுடன் கூடிய மழையின்போது 60-70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கடல் கொந்தளிப்பாக இருக்கும்.
பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்கள அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
