நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவன தலைவர் W.K.H. வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை முனையத்தில் இருந்து எரிவாயுவை விடுவிப்பதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் உலகில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இறக்குமதியில் ஏற்பட்ட தடையே இதற்கு காரணம் என அவர் விளக்கமளித்துள்ளார்.

அடுத்த வாரம் எரிவாயுவுடன் இரண்டு கப்பல்கள் வரவுள்ளதாகவும், அதில் இருந்து முதற்கட்டமாக 3 மில்லியன் நுகர்வோருக்கு எரிவாயு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் திறைசேரி செயலாளருடன் கலந்துரையாடி விரைவான தீர்வு எட்டப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.