யாழில் மீன் வாங்குபவர்கள் அவதானம் - திடீர் சோதனையில் அதிர்ச்சி
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் பழுதடைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது.
வல்வெட்டித்துறை பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது 4 வியாபாரிகளிடமிருந்து சுமார் 30 கிலோ பழுதடைந்த மீன்கள் மற்றும் இறால்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
