பல மாகாணங்களில் பலத்த மழை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இன்று (02) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் குருநாகல், முல்லைத்தீவு மாவட்டங்கள்.

சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் குருநாகல், அனுராதபுரம் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.