பூட்டிய வீட்டிற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்பு - இந்தியாவில் சோகம்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மளிகை கடை நடத்தி வந்த தந்தை, நஷ்டம் காரணமாக கடையை மூடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காலையில் வீடு நீண்ட நேரமாக பூட்டி கிடப்பதைக் கண்ட உறவினர்கள் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றபோது 3 பேரும் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டனர்.
அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடன் தொல்லை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
இந்திய செய்தி
