மீண்டும் எரிபொருள் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்த நிலையில், லங்கா IOC நிறுவனமும் விலை திருத்தம் செய்துள்ளது.
புதிய விலை விபரம் (லங்கா IOC):
- 92 ரக பெற்றோல்: ரூ.10 உயர்ந்து ரூ.424
- ஒட்டோ டீசல்: ரூ.5 உயர்ந்து ரூ.397
- சுப்பர் டீசல்: ரூ.30 குறைந்து ரூ.570
- 95 ரக பெற்றோல்: மாற்றமின்றி ரூ.495
CEYPETCO-வின் விலை உயர்வுக்கு இணையாகவே IOC நிறுவனமும் விலையை திருத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
