இன்று அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று (நவம்பர் 25) சென்னையில் அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 சரிந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,360 சரிந்து ரூ.91,360 ஆகக் குறைந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.93,720-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சி நகை வாங்குவோருக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
குறிப்பாக, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கக் காத்திருப்பவர்களுக்கு இந்த விலைக் குறைவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயரத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு நகைப்பிரியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
.jpeg)