நவம்பர் 30ஆம் திகதி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் ஆசிரியர் சங்கம் முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோருக்கு அறிவுறுத்தல்
மேலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் போஷாக்குப் பிரச்சினைகள் மற்றும் கல்வி ரீதியான சவால்கள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்த அவர், இதனால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நவம்பர் 30ஆம் திகதி மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பில் பெற்றோர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
