நுவரெலியாவில் சீரற்ற வானிலை: 1,091 குடும்பங்கள் பாதிப்பு!


நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இன்று (04) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், 20 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், 224 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

அத்துடன், பேரிடரால் 2 வீடுகள் முழுமையாகவும், 90 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாகவும், வீடுகளில் தேங்கியுள்ள நீர் வடியும் நிலையில், மக்களை மீண்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வந்த மோசமான வானிலை தற்போது ஓரளவு தணிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.