நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், இன்றும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை!


நாட்டில் நிலவி வரும் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் அரசாங்கம் அறிவித்துள்ள வாராந்திர விசேட விடுமுறை இன்றும் நடைமுறையில் உள்ளது.

எரிசக்தி மற்றும் எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இனி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் செயல்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் சேவைகள்,
பொது போக்குவரத்து சேவைகள்,
துறைமுக மற்றும் விமான சேவைகள்,
சுகாதார சேவைகள்,
பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இடையூறு இல்லாமல் நடைபெறும்.

மேலும், இந்த விடுமுறை நாட்களில் துறைகளின் பணிகளை தடையின்றி முன்னெடுக்கவும், தேவையான சேவைகளை உறுதிப்படுத்தவும் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.