ஈரான் போரால் டிரம்ப்பின் செல்வாக்கு கடும் சரிவு!
ஈரான் போரினால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செல்வாக்கு கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரானதும் பல அதிரடியான காரியங்களில் செய்து வருகிறார். வெனிசுலா அதிபரை அவரின் மனைவியுடன் சிறை பிடித்து சிறையில் அடைத்தார். அடுத்து, கிரீன்லாந்து எங்களுக்கே சொந்தம். அந்த தீவை எடுத்துக்கொள்வோம் என டிரம்ப் கூறிய நிலையில்,
அதற்கு ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தது. அடுத்து ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என சொல்லி அந்நாட்டின் மீது போரை துவங்கினார்.
அமெரிக்காவோடு, இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை தாக்கியது. அதில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி அவரின் குடும்பத்துடன் கொல்லப்பட்டார். ஒருபக்கம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைபட்டிருக்கிறது. ஏனெனில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல்களின் வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் அரசு மூடிவிட்டது.
இதனால் பல நாடுகளிலும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் பல நாடுகளில் உணவகங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த போர் முடிவுக்கு வரவேண்டும் என்பது உலகம் முழுவதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஒருபக்கம், இந்த போர் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செல்வாக்கு கடுமையான சரிவை சந்திதுள்ள அதேவேளை உலகமெங்கும் பங்கு சந்தையில் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
