இலங்கையில் மீண்டும் சரிந்த தங்க விலை!


இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (26) காலையுடன் ஒப்பிடுகையில் 5000 ரூபா குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 5000 ரூபாயால் குறைக்கப்பட்டு 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 4500 ரூபாயால் குறைக்கப்பட்டு 357,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று ( 26) பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

கடந்த சில காலங்களாக உயர்வடைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் கணிசமாகக் குறைந்துள்ளமை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 125.39 அமெரிக்க டொலர்களால் (2.75%) சரிவடைந்துள்ளது. இதன் மூலம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 4,428.17 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 653.55 அமெரிக்க டொலர்களால் (12.55%) வீழ்ச்சியடைந்துள்ளது.