நாட்டில் தேர்தல் சட்டங்களில் திருத்தம்!


இலங்கையின் தேர்தல் முறையைச் சீரமைக்கும் நோக்கில், தேர்தல் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தத் திருத்த முன்மொழிவுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.