ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேருந்துகள் - பயணிகள் அவதி!
ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக நேற்றைய தினம் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.
பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவைகளும் நேற்று காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன.
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது,
ஜனாதிபதியின் யாழ்ப்பாண நிகழ்சிக்காக தமது சாலை பேருந்துகள் பயன்படுத்த பட்டதாகவும் இதனால் காலை 10:00 மணியுடன் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டாதாகவும் தெரிவித்தார்.
இதனால் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.
இதேவேளை பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வரை பிற்பகல் 6:15 மணிக்கு ஈடுபடும் சேவை சில மாதங்களாக பிற்பகல் 6:45 மணிக்கு பின்னரே இடம்பெறுகிறது.
இதனால் வடமராச்சி கிழக்கு மக்கள் பிற்பகல் 12:30 மணிக்கு பின்னர் இரவு 6:45 மணிவரை காத்திருக்கின்றனர்.
தை பொங்கல் தினமான நேற்று பருத்தி துறை சாலை தனது சேவையையும் முழுமையாக நிறுத்தி இருந்தது.
குறித்த விடயங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அவர்களிடம் ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பலத்தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டும் அவரால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
