தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!


மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார்.

மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது தந்தை தலையில் காயங்களுடன் வீட்டின் முற்றத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில் கிடப்பதை, அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் இளைய மகன் கண்டுள்ளார்.

உயிரிழந்தவர் மூத்த மகனுடன் மது அருந்தியுள்ளதாகவும், 

அதனால் ஏற்பட்ட தகராறின் காரணமாக மகன் மரக்கட்டைத் துண்டால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.