பிரதமருக்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!
கல்வி சீர்திருத்தங்களுக்காக 500 மில்லியன் ரூபாய் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியினரால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதி தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தானும், இன்னும் சிலரும் முறைப்பாடளித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்படும் முறைப்பாடுகள் எப்போதும் இலஞ்சமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடளிக்கலாம். அதன்படி, நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை மற்றும் வீணாக்கப்பட்டது குறித்து முறைப்பாடளித்துள்ளோம்.
கல்விக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நிதியை வீணாவதற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்க வேண்டும். மேலும், கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் நியாயமான செயல்முறையைப் பின்பற்றத் தவறிவிட்டது.
அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கையை அறிமுகப்படுத்தி, அனைத்து பங்குதாரர்களுடனும் ஒரு பரந்த விவாதத்திற்கு உட்படுத்தியிருக்க வேண்டும், என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
