வீடுகளை சுத்தம் செய்ய இழப்பீடு பெறும் விண்ணப்பப் படிவம் வெளியீடு!
பேரிடரில் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்து பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான 25,000 ரூபாய் நிவாரண உதவிக்கான விண்ணப்பப் படிவத்தை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வெளியிட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் இணைந்து, நாட்டின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு, பேரிடரில் பாதிக்கப்பட்ட வீடுகளின் மீள் கட்டமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 25,000 ரூபாய் நிதி வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளன.
இந்த நிவாரண உதவிக்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது:
விண்ணப்பப் படிவம் (தமிழ்):
https://cdn.virakesari.lk/uploads/medium/file/309899/Application_Format_Rs.25_000_Tamil.pdf
Tags:
இலங்கை செய்தி
