மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஜனாதிபதி அநுர!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள மாத்தளை, கூம்பியன்கொட ஸ்ரீ வித்யாசேகர விகாரைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்குள்ளவர்களிடம் நலன் விசாரித்தார்.
இதன்போது மக்கள் தமது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்ததுடன், தமக்கு வசிப்பதற்காக வேறு இடங்களில் காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல் மற்றும் இழப்பீடு தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்தும் ஜனாதிபதி அவர்களுக்குத் தெரிவித்தார்.
Tags:
இலங்கை செய்தி




