பகிடிவதை குற்றச்சாட்டு; யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேருக்கு நாளை (12) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கனிஷ்ட மாணவர்களை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டதற்காக குறித்த மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் நேற்று (10) மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
