நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டில் நாளை (16) முதல் மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று (15) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தின் தொலுவ, கங்க இஹல, கோறளை, உடதும்பர, மீடதும்பர மற்றும் மினிபே ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேகாலை, நுவரெலியா, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கும் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி
