கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன்!


கால்வாயில் கவிழ்ந்து வேன் ஒன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (13) பிற்பகல் 11.00 மணியளவில் பொலன்னறுவை ZD பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து நேரத்தில் வேனில் நான்கு பேர் பயணித்திருந்ததாகவும், அவர்களில் ஒருவர் காயமடைந்து மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.