பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நாளை திறப்பு!
பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மற்றும் தொடர்ந்தும் அனர்த்த நிலையிலுள்ள பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நாளை 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7000 பேர் தங்கியுள்ளனர். அவர்களை 02 அல்லது 03 மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிவாரண உதவிகளைப் பகிர்ந்தளிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், 1904 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
Tags:
இலங்கை செய்தி
