புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் துணி துவைக்கும் வாளியில் விழுந்து உயிரிழந்த குழந்தை!


புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் குழந்தை ஒன்று துணி துவைக்கும் வாளியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்துயர சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் ஒரு வயதும் 4 மாதமும் ஆன குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று மாலை குழந்தையினை காணவில்லை என பெற்றோர் தேடிய போது குழந்தை குளியலறையில் உள்ள சிறிய பகட் (பாஸ்கட்) ஒன்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

துணி துவைக்கும் இடத்தில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த நிலையில் வாளியில் தவறி விழுத்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பெற்றோரின் கவனயீனத்தால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.