கொழும்பு மற்றும் கண்டிக்கிடையிலான பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!


இயற்கை அனர்த்தங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கண்டிக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளை, இன்று (08) திங்கட்கிழமை முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டியிலிருந்து ரயில் மூலம் கொழும்புக்கு தொழில் நிமித்தம் இதுவரை காலம் வருகை தந்த நபர்களின் வசதி கருதி, இன்று அதிகாலை முதல் தனியான விசேட பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அந்த வகையில் கண்டியிலிருந்து கொழும்புக்குத் தொழில்களுக்காக பயணிப்பவர்கள் ரயில்வே பருவச் சீட்டுகளை பயன்படுத்தி, மேற்படி பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவரென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.