காட்டு யானை தாக்கி வீடு சேதம்!
வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுர கிராமத்திற்குள் இன்று அதிகாலையில் புகுந்த காட்டு யானை, ஒரு வீட்டு சுவரை உடைத்து அங்கு இருந்த பல வீட்டு உபகரணங்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்ததாவது,
குறித்த காட்டு யானை இப்பகுதிகளில் அடிக்கடி வருவது வழக்கமாகிவிட்டது.
இன்றைய தாக்குதலில் தையல் இயந்திரம், கதிரைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபகரணங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன என அவர்கள் தெரிவிக்கின்றனர்
யானை நடமாட்டம் காரணமாக இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து நடைபெறும் இந்த அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசாங்கமும் உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
