கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி முற்றுகை! கைதான 9 வெளிநாட்டுப் பெண்கள்!
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி ஒன்று நேற்று இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த விபச்சார விடுதியை நிர்வகித்த சந்தேகநபர் ஒருவரும், 09 வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரும், 25 முதல் 41 வயதுக்குட்பட்ட தாய்லாந்து பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
