கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்க தீர்மானம்!
தற்போதைய அனர்த நிலைமையும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையும் கருத்தில் கொண்டு, கர்ப்பிணித் தாய்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்க திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கொடுப்பனவு ஒருமுறை மாதிரமே வழங்கப்படவுள்ளதாகவும், 2025 நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாய் சேவை நல நிலையங்களில் பதிவு செய்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் திட்டமாக , டிசம்பர் 16 ஆம் திகதி முதல் பிரதேச செயலலகங்கள் வழியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கர்ப்பிணித் தாய்கள் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்களைப் பெற்று, சுகாதாரத்தை மேம்படுத்துவதில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
