பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவிகள் விடுதியின் அருகில் மனிதக் கருவின் உடற்கூறு பகுதிகள் கண்டெடுப்பு!
பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்தன மகளிர் விடுதியின் அருகில் மனிதக் கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயவர்தன மண்டபத்தின் துணைவேந்தர், இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பேராதனை பொலிஸில் அளித்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த விடுதியில் சுமார் 2000 மாணவிகள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் கருவொன்றின் உடற்கூறு போன்ற பாகங்களைக் கண்டறிந்த பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் அந்த பாகங்களை புதைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்னர் பொலிஸில் முறைப்பாடளிக்கவே மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags:
இலங்கை செய்தி
