மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!


250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப் பதிலாக, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, உயர்தர பாதணிகளை வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள 1,266 பாடசாலைகளைச் சேர்ந்த 145,723 மாணவர்களுக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பாதணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு ஜோடி உள்ளூர் பாதணியை 2,100 ரூபாய் செலவில், ஒரு வருட உத்தரவாதத்துடன் வழங்க உள்ளூர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். 

இதன் ஊடாக அரசாங்கத்திற்கு சுமார் 140 மில்லியன் ரூபாய் இலாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனூடாக குறித்த இரண்டு மாகாணங்களிலுமுள்ள மேலும் 62,481 மாணவர்களுக்கு பாதணிகளை பெற்றுக் கொடுக்க முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.