போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்!


சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட எப்பாவல கட்டியாவ அதிபர், சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.