கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
340 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
பாடசாலை பரீட்சார்த்திகள் 2,46,521 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 94,004 பேருமாக மொத்தம் 3,41,525 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். நாடு முழுவதும் 2,362 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
பரீட்சைக்கு முன்னர் பரீட்சார்த்திகள் தங்கள் அனுமதி அட்டைகளைப் பெற்றிருப்பார்கள். பெறாதவர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
அனுமதி அட்டையில் உங்கள் பெயர், பாடம் குறியீடுகள் மற்றும் பரீட்சைக்கு தோற்றவுள்ள மொழி ஆகியவை சரியாக உள்ளதா என கவனமாகச் சரிபார்க்கவும். ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், தாமதமின்றி திணைக்களத்தைத் தொடர்புகொள்ளவும்.
