சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் மற்றும் கிரீம்களுடன் நபர் ஒருவர் கைது!
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு வைத்திருந்த 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சந்தேக நபர் ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த விசாரணை மருதானை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிருலப்பனை பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் உள்நாட்டு தயாரிப்பான கிரீம்களும் இடம்பெற்றுள்ளன.
மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மருதானைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி