நாட்டில் பன்றி காய்ச்சல் பரவலை தடுக்கும் விசேட வர்த்தமானி வெளியீடு!
கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் கண்டறியப்பட்ட ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் ஆபத்து பகுதிகளாகவும், பன்றிகள் 1992 ஆம் ஆண்டு 59 ஆம் எண் கொண்ட கால்நடைநோய்கள் சட்டத்தின் கீழ் நோய் அபாய விலங்குகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வர்த்தமானி அறிவிப்பு 2025 அக்டோபர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். மேலும் இந்த வர்த்தமானி செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
மேலும், நிலவும் நோய் நிலைமையைப் பொறுத்து செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்படலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி